சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 04 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான சஞ்சய் ராஜரத்னம் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சஞ்சய் ராஜரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கொழும்பு பேராயர் இல்லத்துடனான தொடர்பாடல் குழுவில் சட்டமாதிபர் முக்கிய பங்கை வகிப்பதனால் அவரின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை சட்டமாதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதன் அடிப்படையிலேயே பதவி காலத்தை நீடித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எதிர்வரும் 04 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணியான சஞ்சய் ராஜரத்னம் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சஞ்சய் ராஜரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளார்.இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கொழும்பு பேராயர் இல்லத்துடனான தொடர்பாடல் குழுவில் சட்டமாதிபர் முக்கிய பங்கை வகிப்பதனால் அவரின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை சட்டமாதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதன் அடிப்படையிலேயே பதவி காலத்தை நீடித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.