இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
75 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இன்றைய நான்காவது நாளில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்யூஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மேத்யூ குஹ்னேமன் மற்றும் நேத்தன் லியோன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 257 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 414 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இந்த வெற்றியின் ஊடாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸி. அபார வெற்றி இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.75 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அவுஸ்திரேலிய அணி சார்பாக உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.இன்றைய நான்காவது நாளில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்யூஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மேத்யூ குஹ்னேமன் மற்றும் நேத்தன் லியோன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 257 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 414 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.இந்த வெற்றியின் ஊடாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.