• Nov 22 2024

அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதிகள் மன்னாருக்கு திடீர் விஜயம்...!

Sharmi / Mar 28th 2024, 4:17 pm
image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம்(28) மன்னாருக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்(Paul Stephens) வடமாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று(28) காலை மன்னாருக்கு வருகை தந்தார்.

இந்நிலையில், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

குறித்த சந்திப்பில், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது, அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களுடன் அவர்களின் எண்ணக் கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதிகள் மன்னாருக்கு திடீர் விஜயம். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம்(28) மன்னாருக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்(Paul Stephens) வடமாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று(28) காலை மன்னாருக்கு வருகை தந்தார்.இந்நிலையில், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பிலும் கலந்து கொண்டார்.குறித்த சந்திப்பில், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலின் போது, அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களுடன் அவர்களின் எண்ணக் கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement