"க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமாரவின் தலைமையில் இன்று (10) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் T. N. அமோன் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கம் மற்றும் மாற்றங்களை உருவாக்குதல் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் விளக்கமும்,
அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக்கருக்களை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் வழங்கப்பட்டது. "க்ளீன் ஸ்ரீலங்கா" தொடர்பான காணொளியும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் திருமலையில் விழிப்புணர்வு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமாரவின் தலைமையில் இன்று (10) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இவ்விழிப்புணர்வு நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் T. N. அமோன் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கம் மற்றும் மாற்றங்களை உருவாக்குதல் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் விளக்கமும், அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக்கருக்களை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டது.அரச உத்தியோகத்தர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் வழங்கப்பட்டது. "க்ளீன் ஸ்ரீலங்கா" தொடர்பான காணொளியும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.