• Jan 10 2025

"தூய்மையான இலங்கை" திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு

Chithra / Jan 10th 2025, 11:14 am
image


கிளிநொச்சி  மாவட்ட அரச அதிகாரிகளுக்கான "தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம்  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 90.00 மணிக்கு மாவட்ட  அரச அதிபர் எஸ்.முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  "ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய  ‘தூய்மையான இலங்கை’ திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர்  சாராதாஞ்சலி மனோகரன்  தெளிவுபடுத்தல் கருத்துரைகளை வழங்கினார்.

அரச பணியினை உத்தியோகத்தர்கள் திறப்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்துத் துறைகளும்  சமூகம், சுற்றுச்சூழல், நெறிமுறை, சார்ந்து தங்கள் பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும்  ஜனாதிபதி  தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

மேலும் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருவை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.


"தூய்மையான இலங்கை" திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு கிளிநொச்சி  மாவட்ட அரச அதிகாரிகளுக்கான "தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம்  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 90.00 மணிக்கு மாவட்ட  அரச அதிபர் எஸ்.முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது.இதன்போது  "ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய  ‘தூய்மையான இலங்கை’ திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர்  சாராதாஞ்சலி மனோகரன்  தெளிவுபடுத்தல் கருத்துரைகளை வழங்கினார்.அரச பணியினை உத்தியோகத்தர்கள் திறப்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்துத் துறைகளும்  சமூகம், சுற்றுச்சூழல், நெறிமுறை, சார்ந்து தங்கள் பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.மேலும்  ஜனாதிபதி  தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.மேலும் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருவை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement