• May 05 2025

Chithra / May 5th 2025, 1:48 pm
image


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உர கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இது மேற்கொள்ளப்படுகிறது.

மகேஷ் கம்மன்பிலவிற்கு பிணை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உர கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பதுளை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இது மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement