• Mar 23 2025

பதறவைத்த இரட்டைக்கொலை பின்னணியில் "பலே மல்லி"- துலங்கியது துப்பு

Thansita / Mar 22nd 2025, 4:19 pm
image

தெவிநுவரவில் உள்ள 'தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்திற்கு' முன்பாக நேற்று (21) இரவு  நடந்த இரட்டைக் கொலை தொடர்பான புதிய தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். 

விசாரணைகளின் அடிப்படையில்  இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபராக "பலே மல்லி" என்று பிரபலமாக அறியப்படும் பிரபல குற்றவாளி ஷெஹான் சத்சர சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

பசிந்து தாரக (29) மற்றும் யோமேஷ் நதீஷன் மற்றும் 'பலே மல்லி' என அடையாளம் காணப்பட்டோருக்குமிடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் தற்போது துபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது

இந்த சம்பவம் இரவு 11.45 மணியளவில் தெவிநுவரவில் உள்ள 'தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்தின்' தெற்கு வாயிலுக்கு அருகில் உள்ள சிங்கசான சாலையில் இடம்பெற்றிருந்தது.

பாதிக்கப்பட்ட இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கபுகம்புராவில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​தாக்கப்பட்டனர். 

தாக்குதல் நடத்தியவர்கள் தாரக மற்றும் நதீஷன் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, T-56 துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சம்பவ இடத்தை விட்டுத்தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் பொலிசார் குற்றம் நடந்த இடத்திலிருந்து 39,T-56 தோட்டா உறைகளையும் இரண்டு 9mm தோட்டா உறைகளையும் மீட்டனர். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய வேன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் தீவைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, கொலைகள் குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கினர். 

மாத்தறை மேலதிக நீதவான் மாலன் ஷிரான் ஜெயசூர்யா இன்று காலை சம்பவ இடத்தில் சட்ட  விசாரணையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பதறவைத்த இரட்டைக்கொலை பின்னணியில் "பலே மல்லி"- துலங்கியது துப்பு தெவிநுவரவில் உள்ள 'தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்திற்கு' முன்பாக நேற்று (21) இரவு  நடந்த இரட்டைக் கொலை தொடர்பான புதிய தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைகளின் அடிப்படையில்  இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபராக "பலே மல்லி" என்று பிரபலமாக அறியப்படும் பிரபல குற்றவாளி ஷெஹான் சத்சர சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பசிந்து தாரக (29) மற்றும் யோமேஷ் நதீஷன் மற்றும் 'பலே மல்லி' என அடையாளம் காணப்பட்டோருக்குமிடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் தற்போது துபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறதுஇந்த சம்பவம் இரவு 11.45 மணியளவில் தெவிநுவரவில் உள்ள 'தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்தின்' தெற்கு வாயிலுக்கு அருகில் உள்ள சிங்கசான சாலையில் இடம்பெற்றிருந்தது.பாதிக்கப்பட்ட இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கபுகம்புராவில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் தாரக மற்றும் நதீஷன் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, T-56 துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சம்பவ இடத்தை விட்டுத்தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பின்னர் பொலிசார் குற்றம் நடந்த இடத்திலிருந்து 39,T-56 தோட்டா உறைகளையும் இரண்டு 9mm தோட்டா உறைகளையும் மீட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய வேன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் தீவைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.தாக்குதலைத் தொடர்ந்து, கொலைகள் குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கினர். மாத்தறை மேலதிக நீதவான் மாலன் ஷிரான் ஜெயசூர்யா இன்று காலை சம்பவ இடத்தில் சட்ட  விசாரணையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement