• Nov 14 2024

மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும் வாக்குப் பெட்டிகள்!

Tamil nila / Sep 21st 2024, 6:58 pm
image

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் சற்றுமுன் நிறைவடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.



மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம் பெற்றது.

மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன்னார் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மத்திய நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கின்றன.

மாவட்டத்தில் மொத்தமாக 72.33 வீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் 65 ஆயிரத்து 535 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்குப் பெட்டிகள் முழுமையாக வாக்கு என்னும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும் வாக்குப் பெட்டிகள் மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் சற்றுமுன் நிறைவடைந்துள்ளது.இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம் பெற்றது.மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன்னார் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மத்திய நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கின்றன.மாவட்டத்தில் மொத்தமாக 72.33 வீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் 65 ஆயிரத்து 535 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.வாக்குப் பெட்டிகள் முழுமையாக வாக்கு என்னும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement