• Mar 11 2025

நள்ளிரவு முதல் தடை; மேலதிக வகுப்புக்கள் பற்றி தகவல் தாருங்கள்! பொலிஸார் கோரிக்கை

Chithra / Mar 11th 2025, 7:13 am
image


2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், 

கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு இன்று  நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி,   பொலிஸ் தலைமையகம் - 0112421111, பொலிஸ் அவசர இலக்கம் - 119, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் - 1911, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 011 278 4208 / 011 278 4537 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நள்ளிரவு முதல் தடை; மேலதிக வகுப்புக்கள் பற்றி தகவல் தாருங்கள் பொலிஸார் கோரிக்கை 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு இன்று  நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.இந்த நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,   பொலிஸ் தலைமையகம் - 0112421111, பொலிஸ் அவசர இலக்கம் - 119, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் - 1911, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 011 278 4208 / 011 278 4537 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement