• Nov 22 2024

முடிவுக்கு வரும் கிரிக்கட் மீதான தடை - மகிழ்ச்சியில் கிரிக்கட் ரசிகர்கள்..!samugammedia

Tharun / Jan 12th 2024, 8:49 pm
image

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார்.

அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறான குறிப்பை தெரிவித்ததாகவும் ஐ.சி.சி. அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கையில் தடையை நீக்குவதற்கு ‘zoom’ ஊடாக விசேட செயற்குழு கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கை இழக்க நேரிடும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு வரும் கிரிக்கட் மீதான தடை - மகிழ்ச்சியில் கிரிக்கட் ரசிகர்கள்.samugammedia இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார்.அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறான குறிப்பை தெரிவித்ததாகவும் ஐ.சி.சி. அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கையில் தடையை நீக்குவதற்கு ‘zoom’ ஊடாக விசேட செயற்குழு கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கை இழக்க நேரிடும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement