• Mar 31 2025

மனுஷவின் இடத்துக்குப் பந்துல லால் பண்டாரிகொட - வர்த்தமானியில் வெளியீடு!

Chithra / Aug 15th 2024, 9:03 am
image


மனுஷ நாணயக்காரவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்கத் தீர்மானித்து அவரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. 

இந்த நிலையில் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மனுஷவின் இடத்துக்குப் பந்துல லால் பண்டாரிகொட - வர்த்தமானியில் வெளியீடு மனுஷ நாணயக்காரவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்கத் தீர்மானித்து அவரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement