• Mar 17 2025

பட்டலந்த அறிக்கை; குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும்! பிரதீபா மஹாநாம ஹேவா

Chithra / Mar 17th 2025, 9:29 am
image

 

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

விரிவான சாட்சியங்களை பதிவு செய்ததன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமை' உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, உத்தேச அரசியலமைப்பில் மக்கள் 'உயிர் வாழும்' உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என  தெரிவித்துள்ளார்.  

பட்டலந்த அறிக்கை; குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் பிரதீபா மஹாநாம ஹேவா  பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவான சாட்சியங்களை பதிவு செய்ததன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமை' உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உத்தேச அரசியலமைப்பில் மக்கள் 'உயிர் வாழும்' உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என  தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement