• Nov 15 2025

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! - துயிலும் இல்லங்களில் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பு! கோடீஸ்வரன் எம்.பி காட்டம்

Chithra / Nov 13th 2025, 7:19 pm
image

வடக்கு, கிழக்கில் இராணுவ வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனவும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். 

மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார். 

வடக்கு, கிழக்கில் 32 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளதாகவும் இன விடுதலைக்காக போராடியவர்களின் நினைவான துயிலும் இல்லங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய இனம் மற்றும் மதம் சார்ந்து மட்டுமே சிந்திப்பவர்களாக உள்ளனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். 

 

பௌத்தத்தை முன்னிலைப்படுத்திப் புத்தசாசன அமைச்சை மாத்திரமே உருவாக்கியுள்ளதாகவும் ஏனைய மதங்களையும் இனங்களையும் முன்னிலைப்படுத்தி எந்தவொரு அமைச்சையும் உருவாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

  

எதிர்க்கட்சித் தலைவரும், புத்தசாசன அமைச்சுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கினீர்கள் என கேட்பதாகவும் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார். 

 

இதனைப் பார்க்கும் போது அனைவரும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” போலவே செயற்படுவதாக அவர் விமர்சித்தார். எனவே இந்த விடயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் - துயிலும் இல்லங்களில் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பு கோடீஸ்வரன் எம்.பி காட்டம் வடக்கு, கிழக்கில் இராணுவ வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனவும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் 32 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளதாகவும் இன விடுதலைக்காக போராடியவர்களின் நினைவான துயிலும் இல்லங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய இனம் மற்றும் மதம் சார்ந்து மட்டுமே சிந்திப்பவர்களாக உள்ளனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.  பௌத்தத்தை முன்னிலைப்படுத்திப் புத்தசாசன அமைச்சை மாத்திரமே உருவாக்கியுள்ளதாகவும் ஏனைய மதங்களையும் இனங்களையும் முன்னிலைப்படுத்தி எந்தவொரு அமைச்சையும் உருவாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.   எதிர்க்கட்சித் தலைவரும், புத்தசாசன அமைச்சுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கினீர்கள் என கேட்பதாகவும் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.  இதனைப் பார்க்கும் போது அனைவரும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” போலவே செயற்படுவதாக அவர் விமர்சித்தார். எனவே இந்த விடயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement