• Nov 24 2024

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பக்தி ரச காவியப் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு

Tamil nila / May 24th 2024, 7:39 pm
image

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் முதலாவது பக்தி ரச காவியப் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீ அவர்களினால் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ள இந்த பாடல்களின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு ஆலய முன்றிலில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் ஆலயங்களின் வரலாற்றில் பெண் ஒருவர் செயலாளராகயிருந்து நிகழ்வொன்றுக்கு தலைமைதாங்கி நடாத்திய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

ஆலயத்தின் செயலாளர்  தயாளகௌரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயத்தின் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல்கள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீ மற்றும் ஆலயத்திற்கு சிறப்புசேர்ந்த முன்னாள் தலைவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பக்தி ரச காவியப் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் முதலாவது பக்தி ரச காவியப் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீ அவர்களினால் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ள இந்த பாடல்களின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு ஆலய முன்றிலில் நடைபெற்றது.கிழக்கு மாகாணத்தின் ஆலயங்களின் வரலாற்றில் பெண் ஒருவர் செயலாளராகயிருந்து நிகழ்வொன்றுக்கு தலைமைதாங்கி நடாத்திய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.ஆலயத்தின் செயலாளர்  தயாளகௌரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயத்தின் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல்கள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வின்போது ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீ மற்றும் ஆலயத்திற்கு சிறப்புசேர்ந்த முன்னாள் தலைவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement