மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று(24) இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏதும் இல்லை என பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் குண்டு தாக்குதல் அச்சம் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதுடன், இன்று காலை 9.30 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம். மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று(24) இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏதும் இல்லை என பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுதி செய்துள்ளது.இந்நிலையில் குறித்த பகுதியில் குண்டு தாக்குதல் அச்சம் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதுடன், இன்று காலை 9.30 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.