• Nov 23 2024

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கிவைப்பு...!

Sharmi / Jul 13th 2024, 12:59 pm
image

முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம்(13)  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியால் நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த திட்டமானது 25 மாவட்டங்களிலும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இன்று 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவாகிய  மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விருந்தினர்கள் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து, யாழ் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த உதவித் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்ததுடன், தகுதிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

இதேநேரம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றுமுதல் ஜூலை 15 ஆம் திகதி வரையும், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 13 ஆம் திகதியும் கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

மேலும், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொனராகலை , மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19 ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம், தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3500 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கிவைப்பு. முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம்(13)  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதியால் நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த திட்டமானது 25 மாவட்டங்களிலும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இன்று 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவாகிய  மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விருந்தினர்கள் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதையடுத்து, யாழ் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த உதவித் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்ததுடன், தகுதிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.இதேநேரம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றுமுதல் ஜூலை 15 ஆம் திகதி வரையும், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 13 ஆம் திகதியும் கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.மேலும், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொனராகலை , மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19 ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம், தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3500 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.மேலும், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement