• Nov 25 2024

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம், இலங்கை - இந்திய கடல் எல்லையை நோக்கி சென்ற மீனவர்கள்..!samugammedia

Tharun / Mar 3rd 2024, 1:00 pm
image

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய எல்லை நோக்கி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள் இன்றையதினம் சென்றிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


இலங்கை கடல் பரப்புக்குள்  எல்லை மீறி வரும் இந்திய இழுவைப் படகுகள், இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. 


இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய - இலங்கை கடல் எல்லைக்குச் சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.


இதேவேளை குறித்த  போராட்டம் காரணமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கருதி இராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் கடற்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம், இலங்கை - இந்திய கடல் எல்லையை நோக்கி சென்ற மீனவர்கள்.samugammedia இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய எல்லை நோக்கி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள் இன்றையதினம் சென்றிருந்தனர்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கை கடல் பரப்புக்குள்  எல்லை மீறி வரும் இந்திய இழுவைப் படகுகள், இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய - இலங்கை கடல் எல்லைக்குச் சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.இதேவேளை குறித்த  போராட்டம் காரணமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கருதி இராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் கடற்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement