இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் பூதவுடல் இன்றைய தினம் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைக்க, தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, கிளிநொச்சி வர்த்தக சங்கம், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சியிலும் சாந்தனுக்கு பெருந்திரளானோர் உணர்வுபூர்வமாக அஞ்சலி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் பூதவுடல் இன்றைய தினம் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைக்க, தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து, கிளிநொச்சி வர்த்தக சங்கம், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.