காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நோயாளி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு யாரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில், இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.
எவ்வாறாயினும், இந்த நோயைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சுகாதார பிரிவால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு கைதிக்கு மூளைக் காய்ச்சல். ஆபத்தில் காலி சிறைச்சாலை காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நோயாளி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த 19ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு யாரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில், இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.எவ்வாறாயினும், இந்த நோயைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சுகாதார பிரிவால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.