• Nov 24 2024

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு...!

Sharmi / Jul 23rd 2024, 5:11 pm
image

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் இன்று(23) இடம்பெற்றது.

கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

கட்சியின் செயல்நிலை உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கும், தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்(பனாகொட மகேஸ்வரன்)க்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு. கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் இன்று(23) இடம்பெற்றது.கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.கட்சியின் செயல்நிலை உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கும், தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்(பனாகொட மகேஸ்வரன்)க்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement