மாதம்பை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தலசீமியா செயற்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமொன்று நேற்று புத்தளம் - மதுரங்குளி தொஸ்தரவத்த பெளத்த விகாரையில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில், பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இந்த இரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
சிலாபம் பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இரத்த வங்கி பிரிவினர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மதுரங்குளியில் இரத்ததான நிகழ்வு மாதம்பை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தலசீமியா செயற்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமொன்று நேற்று புத்தளம் - மதுரங்குளி தொஸ்தரவத்த பெளத்த விகாரையில் நடைபெற்றது.காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில், பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.இந்த இரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.சிலாபம் பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இரத்த வங்கி பிரிவினர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.