• Jul 13 2025

நெடுந்தீவில் திடீரென மூழ்கிய படகு - மயிரிழையில் உயிர்தப்பிய சுற்றுலாவிகள்!

shanuja / Jul 12th 2025, 10:53 pm
image

நெடுந்தீவிற்கு 12 சுற்றுலாப் பயணிகளுடன் சுற்றுலா சென்ற படகு ஒன்று திடீரென மூழ்கியதில் 

சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாவிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறியரக படகில் சுற்றுலாப் பயணிகள் 12 பேர், 02 பணியாளர்கள் என 14 பேர் சென்றுள்ளனர். 


 நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளது. அப்போது சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகின் பணியாளர்கள் அவதானித்தனர்.


அதனையடுத்து சபரிஷ் படகின் பணியாளர்கள் விரைந்து  செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றினர். 


சுற்றுலாப் பயணிகளை மாற்றிய ஓரிரு நிமிடங்களில் குறித்த படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவில் திடீரென மூழ்கிய படகு - மயிரிழையில் உயிர்தப்பிய சுற்றுலாவிகள் நெடுந்தீவிற்கு 12 சுற்றுலாப் பயணிகளுடன் சுற்றுலா சென்ற படகு ஒன்று திடீரென மூழ்கியதில் சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாவிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறியரக படகில் சுற்றுலாப் பயணிகள் 12 பேர், 02 பணியாளர்கள் என 14 பேர் சென்றுள்ளனர்.  நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளது. அப்போது சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகின் பணியாளர்கள் அவதானித்தனர்.அதனையடுத்து சபரிஷ் படகின் பணியாளர்கள் விரைந்து  செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றினர். சுற்றுலாப் பயணிகளை மாற்றிய ஓரிரு நிமிடங்களில் குறித்த படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement