• Jul 13 2025

சிங்கமலையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் சாதனை - பாடசாலையில் முதல்நிலை சித்தி - கதறும் பெற்றோர்!

shanuja / Jul 12th 2025, 11:08 pm
image


சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 


கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்ற 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.  


இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவன்,  சக பாடசாலை மாணவர்களுடன் கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.


அங்கு சென்ற மாணவனுக்கு அட்டை கடித்து  காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் ஏற்பட்ட  இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி கழுவி கொண்டிருந்த போதே மாணவன்  நீர்தேக்கதில் விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்திருந்தினர். 


சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த  மாணவன் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால்  கடந்த 9ஆம் திகதி சடலமாக  மீட்கப்பட்டார். 


க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் (10) வெளியாகியிருந்த நிலையில் 

பரீட்சைப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்து உயிரிழந்த மாணவனின் பெறுபேறுகள் வெளியாகியது. 


குறித்த மாணவன் ஆங்கில மொழியில் கற்று 7A, 1B, 1C பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அவரது பெறுபேறுகளே பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளாக வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவனின் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட்ட குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் உள்ளிட்டோர் மனமுடைந்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

சிங்கமலையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் சாதனை - பாடசாலையில் முதல்நிலை சித்தி - கதறும் பெற்றோர் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார். கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்ற 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.  இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவன்,  சக பாடசாலை மாணவர்களுடன் கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.அங்கு சென்ற மாணவனுக்கு அட்டை கடித்து  காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் ஏற்பட்ட  இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி கழுவி கொண்டிருந்த போதே மாணவன்  நீர்தேக்கதில் விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்திருந்தினர். சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த  மாணவன் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால்  கடந்த 9ஆம் திகதி சடலமாக  மீட்கப்பட்டார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் (10) வெளியாகியிருந்த நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்து உயிரிழந்த மாணவனின் பெறுபேறுகள் வெளியாகியது. குறித்த மாணவன் ஆங்கில மொழியில் கற்று 7A, 1B, 1C பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அவரது பெறுபேறுகளே பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளாக வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட்ட குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் உள்ளிட்டோர் மனமுடைந்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement