• Nov 24 2024

நாட்டை சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்...! சஜித் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Jan 25th 2024, 6:48 am
image

அரசு நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்றையதினம்(24)  நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியல் கட்டளை 27 (2) இன் கீழ் அரசிடம் கேள்வி எழுப்பும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது.

இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஸ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசில் உள்ளனர்.

இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். சஜித் வலியுறுத்து.samugammedia அரசு நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.குறித்த விடயத்தினை அவர் நேற்றையதினம்(24)  நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.மேலும் எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியல் கட்டளை 27 (2) இன் கீழ் அரசிடம் கேள்வி எழுப்பும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.அத்துடன் நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது.இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஸ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசில் உள்ளனர்.இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement