• Jul 13 2025

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு; இம்மாத இறுதிக்குள் நிரந்தர தீர்வு! அமைச்சர் உறுதி

Chithra / Jul 13th 2025, 11:33 am
image


பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கம் பொறுப்பேற்ற பின்  பல தசாப்த காலமாக பொதுமக்களின்  பாவனைக்கு வழங்கப்படாமல் இருந்த யாழ் பலாலி  வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறந்து விட்டோம். 

அதேபோன்று பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள் சென்று வழிபடக்கூடிய வகையில் எமது அரசாங்கம் இம் மாத இறுதிக்குள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

ஏனெனில் குறித்த ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் பல தசாப்த காலமாக சிக்குண்ட ஆலயமாக காணப்படுகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மக்களிடம் கையளிக்க வேண்டும்.  என அவர் மேலும் தெரிவித்தார்.


பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு; இம்மாத இறுதிக்குள் நிரந்தர தீர்வு அமைச்சர் உறுதி பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது அரசாங்கம் பொறுப்பேற்ற பின்  பல தசாப்த காலமாக பொதுமக்களின்  பாவனைக்கு வழங்கப்படாமல் இருந்த யாழ் பலாலி  வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறந்து விட்டோம். அதேபோன்று பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள் சென்று வழிபடக்கூடிய வகையில் எமது அரசாங்கம் இம் மாத இறுதிக்குள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் குறித்த ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் பல தசாப்த காலமாக சிக்குண்ட ஆலயமாக காணப்படுகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மக்களிடம் கையளிக்க வேண்டும்.  என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement