• Jul 13 2025

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தனின் நினைவு தினம்!

Thansita / Jul 13th 2025, 3:31 pm
image

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களின் நினைவு தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெற்றது.

குறித்த நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா இமாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இரா.சம்மந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார்.

எங்களுடைய விடுதலைப்போராட்டம் என்பது அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வா முதல் பிரபாகரன் வரை எட்டு தசாப்தமாக தொடர்கிறது.

விமர்சனங்கள் உண்டு  அவற்றை எல்லாம் தாண்டி தேசிய விடுதலையை கொண்டு சென்ற பங்கு சம்மந்தனுக்கு மிகப்பெரியது.சாள்ஸ் நிர்மலநாதனும் நானும் இறுதியாக சந்திக்கும் போது அவரின் அனுமதியுடன்  குரல் பதிவு செய்தேன் என் மீதான நடவடிக்கை இறுகுகின்ற போது வெளியிடுவேன் 

நினைவாற்றல் நிறைந்தவர் விடயங்களை கேட்டு பதிலளிக்க கூடியவர் 

விக்கினேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக கொண்டு வந்தபோது மகிந்தாவைப்பார்த்து சம்மந்தன் ஐயா கேட்டார்.பிள்ளையானைப்பார்த்து எப்படி பொலிஸ் அதிகாரம் தரமுடியும் என கேட்டிருந்தீர்கள் இவருக்கு என்ன பதில் சொல்லப்போறீர்கள் அதிகாரத்தை வழங்குங்கள் என கூறினார்.

 பசில் கோத்தபாய பெயர் சொல்லியே பேசக்கூடியவர்

கஜேந்திரகுமார் பேரன் போன்ற விண்ணர் போற வழி தெரியவில்லை என்று சொன்னார்.

யார் கதைத்தாலும் கேட்கக்கூடிய நியாயத்தை வழங்க கூடியவர் சிலர் கேளிக்கையாக நோக்கலாம் தீபாவளிக்கு தீர்வு பொங்கலுக்கு தீர்வு அந்த விடயங்கள் எதிரிக்கு சவால் விடும் அது ஒரு தலைவரின் பாங்கு 

நீலம் திருச்செல்வன் சம்மந்தன்  சந்திரிக்காவோடு நெருக்கமானவர்கள்  இடைக்கால வரைபை மைத்திரி கொண்டு வரும்போது  சந்திரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு கூறிய நிலையில்  எங்களை நம்ப வேண்டும்  என தெரிவித்தவர்

கட்சியில் எல்லாரையும் அரவணைத்து சென்றவர் 

யுத்தத்திற்கு பின் அவரின் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தது எனினம் அவரை வைத்து சிலர்  தவறான வழிநடத்தல்களை மேற்கொண்டனர் என குறிப்பிட்டிருந்தார்


 

மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தனின் நினைவு தினம் மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களின் நினைவு தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெற்றது.குறித்த நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா இமாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இரா.சம்மந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார்.எங்களுடைய விடுதலைப்போராட்டம் என்பது அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வா முதல் பிரபாகரன் வரை எட்டு தசாப்தமாக தொடர்கிறது.விமர்சனங்கள் உண்டு  அவற்றை எல்லாம் தாண்டி தேசிய விடுதலையை கொண்டு சென்ற பங்கு சம்மந்தனுக்கு மிகப்பெரியது.சாள்ஸ் நிர்மலநாதனும் நானும் இறுதியாக சந்திக்கும் போது அவரின் அனுமதியுடன்  குரல் பதிவு செய்தேன் என் மீதான நடவடிக்கை இறுகுகின்ற போது வெளியிடுவேன் நினைவாற்றல் நிறைந்தவர் விடயங்களை கேட்டு பதிலளிக்க கூடியவர் விக்கினேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக கொண்டு வந்தபோது மகிந்தாவைப்பார்த்து சம்மந்தன் ஐயா கேட்டார்.பிள்ளையானைப்பார்த்து எப்படி பொலிஸ் அதிகாரம் தரமுடியும் என கேட்டிருந்தீர்கள் இவருக்கு என்ன பதில் சொல்லப்போறீர்கள் அதிகாரத்தை வழங்குங்கள் என கூறினார். பசில் கோத்தபாய பெயர் சொல்லியே பேசக்கூடியவர்கஜேந்திரகுமார் பேரன் போன்ற விண்ணர் போற வழி தெரியவில்லை என்று சொன்னார்.யார் கதைத்தாலும் கேட்கக்கூடிய நியாயத்தை வழங்க கூடியவர் சிலர் கேளிக்கையாக நோக்கலாம் தீபாவளிக்கு தீர்வு பொங்கலுக்கு தீர்வு அந்த விடயங்கள் எதிரிக்கு சவால் விடும் அது ஒரு தலைவரின் பாங்கு நீலம் திருச்செல்வன் சம்மந்தன்  சந்திரிக்காவோடு நெருக்கமானவர்கள்  இடைக்கால வரைபை மைத்திரி கொண்டு வரும்போது  சந்திரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு கூறிய நிலையில்  எங்களை நம்ப வேண்டும்  என தெரிவித்தவர்கட்சியில் எல்லாரையும் அரவணைத்து சென்றவர் யுத்தத்திற்கு பின் அவரின் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தது எனினம் அவரை வைத்து சிலர்  தவறான வழிநடத்தல்களை மேற்கொண்டனர் என குறிப்பிட்டிருந்தார் 

Advertisement

Advertisement

Advertisement