• Jul 13 2025

மாடலிங் துறையில் சாதித்துகாட்டிய கருப்பழகி சான் ரேச்சல் உயிர்மாய்ப்பு

Chithra / Jul 13th 2025, 3:32 pm
image


கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்ற புதுச்சேரி மாடல் சான் ரேச்சல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது. 

தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் தன் நிறந்தை வைத்தே அதுவும் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன்மாதிரியாக சாதித்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல்.

சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்த அவர், முழுக்க முழுக்க தந்தையின்ரவணைப்பில் வளர்ந்தார். 

அவர் குடும்பத்தில் மற்றவர்கள் லைட் கலரில் இருக்க இவருக்கு மட்டுமே  கருப்பு நிறத்தில் இருந்ததால் பல கிண்டல் கேலிகளுக்கு ஆளானார். 

கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையிலும் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து மாடலிங்கில் கலக்கி வந்தார். 

பொதுவாக மற்ற துறைகளைக் காட்டிலும் மாடலிங் துறையிலும், அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறப் பாகுபாடு இருக்கிறது. கருமை நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகவும் காட்டுகின்றனர். 

குறிப்பாக கருப்பு நிறம் கொண்டவர்கள் பல்வேறு விதத்தில் ஒதுக்கப்படுவது தன்னை பெரிதும் பாதித்ததால் அழகுக்கு நிறம் பொருட்டல்ல என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே மாடலிங் துறையில் களமிறங்கியதாக அவர் முன்னதாக கூறியிருந்தார். 

இந்நிலையில் பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக  தகவல்கள் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மாடலிங் துறையில் சாதித்துகாட்டிய கருப்பழகி சான் ரேச்சல் உயிர்மாய்ப்பு கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்ற புதுச்சேரி மாடல் சான் ரேச்சல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது. தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் தன் நிறந்தை வைத்தே அதுவும் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன்மாதிரியாக சாதித்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல்.சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்த அவர், முழுக்க முழுக்க தந்தையின்ரவணைப்பில் வளர்ந்தார். அவர் குடும்பத்தில் மற்றவர்கள் லைட் கலரில் இருக்க இவருக்கு மட்டுமே  கருப்பு நிறத்தில் இருந்ததால் பல கிண்டல் கேலிகளுக்கு ஆளானார். கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையிலும் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து மாடலிங்கில் கலக்கி வந்தார். பொதுவாக மற்ற துறைகளைக் காட்டிலும் மாடலிங் துறையிலும், அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறப் பாகுபாடு இருக்கிறது. கருமை நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகவும் காட்டுகின்றனர். குறிப்பாக கருப்பு நிறம் கொண்டவர்கள் பல்வேறு விதத்தில் ஒதுக்கப்படுவது தன்னை பெரிதும் பாதித்ததால் அழகுக்கு நிறம் பொருட்டல்ல என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே மாடலிங் துறையில் களமிறங்கியதாக அவர் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக  தகவல்கள் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement