• Sep 20 2024

வெளிநாட்டில் பிரித்தானிய குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம் - மருத்துவமனையில் அனுமதி! samugammedia

Tamil nila / Jun 11th 2023, 9:38 pm
image

Advertisement

சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி தங்கள் மகள் உணவு நச்சுத்தன்மையால்(food poison) பாதிக்கப்பட்டதை குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானியாவைச் சேர்ந்த குடும்பங்கள் துருக்கி நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட நிலையில், பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் அண்டலியாவில் உள்ள Rixos Sungate ஹொட்டலில் சுமார் 33 குடும்பங்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு உணவு உண்டபின் பலருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது உணவு நச்சுத்தன்மை (Food Poison) ஏற்பட்டதன் காரணமாக பலருக்கும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானிய தம்பதியினர் மகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்தனர். 

மேலும் டொமினிக் ப்ராக்லே என்பவர் கூறுகையில், 'முதல் நாள் இரவில் எனது இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அதனால் உயிரிழந்துவிட்டாள் என்றே நினைத்தேன்' என தெரிவித்துள்ளார்.  

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுற்றுலா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'துருக்கியின் அண்டலியாவில் உள்ள Rixos Sungate ஹொட்டலில் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நங்கள் அறிவோம்.

எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதன்மையான முன்னுரிமை ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட எவருடனும் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். தேவைப்படும் இடங்களில் ஆதரவை வழங்குகிறோம் மற்றும் ஹொட்டலுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறோம்' என கூறியுள்ளது.


வெளிநாட்டில் பிரித்தானிய குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம் - மருத்துவமனையில் அனுமதி samugammedia சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி தங்கள் மகள் உணவு நச்சுத்தன்மையால்(food poison) பாதிக்கப்பட்டதை குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் பிரித்தானியாவைச் சேர்ந்த குடும்பங்கள் துருக்கி நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட நிலையில், பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துருக்கியின் அண்டலியாவில் உள்ள Rixos Sungate ஹொட்டலில் சுமார் 33 குடும்பங்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு உணவு உண்டபின் பலருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது உணவு நச்சுத்தன்மை (Food Poison) ஏற்பட்டதன் காரணமாக பலருக்கும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் பிரித்தானிய தம்பதியினர் மகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்தனர். மேலும் டொமினிக் ப்ராக்லே என்பவர் கூறுகையில், 'முதல் நாள் இரவில் எனது இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அதனால் உயிரிழந்துவிட்டாள் என்றே நினைத்தேன்' என தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுற்றுலா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'துருக்கியின் அண்டலியாவில் உள்ள Rixos Sungate ஹொட்டலில் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நங்கள் அறிவோம்.எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதன்மையான முன்னுரிமை ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட எவருடனும் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். தேவைப்படும் இடங்களில் ஆதரவை வழங்குகிறோம் மற்றும் ஹொட்டலுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறோம்' என கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement