பிரித்தானியாவின் பிரதமராக 2022 அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
குறித்த விரதம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
வாரந்தோறும் 36 மணித்தியாலங்கள் விரதம் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இந்த காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன்.
வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு. எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது. இவ்வாறு சுனக் கூறினார்.
மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
36 மணித்தியாலங்கள் விரதம் இருக்கும் பிரித்தானிய பிரதமர். காரணம் என்ன samugammedia பிரித்தானியாவின் பிரதமராக 2022 அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.குறித்த விரதம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,வாரந்தோறும் 36 மணித்தியாலங்கள் விரதம் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இந்த காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன். வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு. எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது. இவ்வாறு சுனக் கூறினார்.மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.