• Jan 19 2025

பிரித்தானிய தொலைக்காட்சி தொடர் பிரபலம் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிப்பு !

Tharmini / Jan 15th 2025, 11:19 am
image

பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற ரோரி கலம் சைக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பிரபலமான ரோரி கலம் சைக்ஸ் மாலிபுவில் உள்ள அவரது பங்களாவில் கார்பன்மொனாக்சைட் வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயில் இருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் தெரிவித்துள்ளார்.

எனது மகன் வீடு தீயில் சிக்குண்டது, நான் அவரை காப்பாற்ற முயற்சித்தேன் ஆனால் தண்ணீர் வரவில்லை அது நிறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் தீயணைப்பு பிரிவினரின் உதவியை கேட்பதற்காக ஓடினேன், ஆனால் நான் திரும்பிவந்தபோது மகன் இருந்த பகுதி முற்றாக தீக்கிரையாகி இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா என்னை விட்டுவிட்டுபோகாதே என அவன் அலறினான், எந்த தாயும் அவ்வாறான சூழ்நிலையில் தனது மகனை விட்டுவிட்டு போகமாட்டாள், எனது கை உடைந்திருந்தது அதனால் அவரை தூக்கமுடியவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

எனது அழகான மகனின் உயிரிழப்பினால் நான் முற்றாக மனதுடைந்துள்ளேன் என சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள அவர், லாஸ்வேர்ஜெனெஸ் நீரை நிறுத்திவிட்டதால் என்னால் தீயை அணைக்க முடியவில்லை 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் அவர்களிடம் தண்ணீர் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி தொடர் பிரபலம் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிப்பு பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற ரோரி கலம் சைக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பிரபலமான ரோரி கலம் சைக்ஸ் மாலிபுவில் உள்ள அவரது பங்களாவில் கார்பன்மொனாக்சைட் வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயில் இருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் தெரிவித்துள்ளார்.எனது மகன் வீடு தீயில் சிக்குண்டது, நான் அவரை காப்பாற்ற முயற்சித்தேன் ஆனால் தண்ணீர் வரவில்லை அது நிறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.உள்ளுர் தீயணைப்பு பிரிவினரின் உதவியை கேட்பதற்காக ஓடினேன், ஆனால் நான் திரும்பிவந்தபோது மகன் இருந்த பகுதி முற்றாக தீக்கிரையாகி இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.அம்மா என்னை விட்டுவிட்டுபோகாதே என அவன் அலறினான், எந்த தாயும் அவ்வாறான சூழ்நிலையில் தனது மகனை விட்டுவிட்டு போகமாட்டாள், எனது கை உடைந்திருந்தது அதனால் அவரை தூக்கமுடியவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.எனது அழகான மகனின் உயிரிழப்பினால் நான் முற்றாக மனதுடைந்துள்ளேன் என சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள அவர், லாஸ்வேர்ஜெனெஸ் நீரை நிறுத்திவிட்டதால் என்னால் தீயை அணைக்க முடியவில்லை 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் அவர்களிடம் தண்ணீர் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement