• Jan 15 2025

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்கள் மாயம்..!

Sharmi / Jan 15th 2025, 11:17 am
image

கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கு சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ளதாகவும், அந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணரும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, காணாமல் போயுள்ள வாகனங்களை கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, கடந்த காலங்களில் மாகாண சபைகளின் பல வாகனங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் சிலவற்றை அரசியல்வாதிகளுடன் நட்புடன் பழகும் சிறு அதிகாரிகள் சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்த அறிக்கையில், மத்திய மாகாண சபையின் பல்வேறு வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை கணக்காய்வு வெளிப்படுத்தவில்லை.

தென் மாகாண சபைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் உட்பட 201 வாகனங்கள் இருந்தமை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கணக்காய்வாளர் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன குறிப்பிடுகையில், இந்த நாட்களில் மாகாண சபைகளின் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.


மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்கள் மாயம். கடந்த காலத்தில் மாகாண சபைகளுக்கு சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ளதாகவும், அந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணரும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, காணாமல் போயுள்ள வாகனங்களை கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அதேவேளை, கடந்த காலங்களில் மாகாண சபைகளின் பல வாகனங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மாகாண சபைகளின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் சிலவற்றை அரசியல்வாதிகளுடன் நட்புடன் பழகும் சிறு அதிகாரிகள் சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, அந்த அறிக்கையில், மத்திய மாகாண சபையின் பல்வேறு வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை கணக்காய்வு வெளிப்படுத்தவில்லை.தென் மாகாண சபைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் உட்பட 201 வாகனங்கள் இருந்தமை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கணக்காய்வாளர் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன குறிப்பிடுகையில், இந்த நாட்களில் மாகாண சபைகளின் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement