யாழில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கைக்குழந்தையுடன் ஏமாற்றி திருடி வந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் திருநெல்வேலி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜேர்மனில் இருந்து வந்த பெண்மணியின் கைப்பையில் இருந்த 500 யூரோ வெளிநாட்டு பணம் மற்றும் இருபதாயிரம் ரூபா இலங்கை பணம் அத்துடன் கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பனவும் களவாடப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு தகவலுக்கமைய கோப்பாய் பொலிசாரும் இணைந்து சங்கானையைச் சேர்ந்த 22 வயது ஆண், 28 வயது பெண் ஆகிய சகோதரர்களை கைது செய்து பொருட்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சகோதரியின் கைக்குழந்தையை மக்கள் உள்ள இடங்களில் கொண்டு சென்று ஏமாற்றி களவு நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
யாழில் கைக்குழந்தையுடன் ஏமாற்றி திருடி வந்த சகோதரர்கள் கைது.samugammedia யாழில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கைக்குழந்தையுடன் ஏமாற்றி திருடி வந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் திருநெல்வேலி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜேர்மனில் இருந்து வந்த பெண்மணியின் கைப்பையில் இருந்த 500 யூரோ வெளிநாட்டு பணம் மற்றும் இருபதாயிரம் ரூபா இலங்கை பணம் அத்துடன் கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பனவும் களவாடப்பட்டுள்ளது.திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு தகவலுக்கமைய கோப்பாய் பொலிசாரும் இணைந்து சங்கானையைச் சேர்ந்த 22 வயது ஆண், 28 வயது பெண் ஆகிய சகோதரர்களை கைது செய்து பொருட்களையும் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சகோதரியின் கைக்குழந்தையை மக்கள் உள்ள இடங்களில் கொண்டு சென்று ஏமாற்றி களவு நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.