தெருநாய்கள் துரத்தியதால் காளை மாடு ஒன்று கூரையில் ஏறி நின்ற நெகிழ்ச்சிக் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
தெலங்கானாவில் உள்ள ஜெய்நாத் என்ற பகுதியில் காளை மாடு சென்று கொண்டிருந்தது. அதன்போது அவ்வழியே பல தெருநாய்கள் நின்றுள்ளன.
காளை மாட்டைக் கண்டதும் தெருநாய்கள் குரைத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தது. தெருநாய்கள் துரத்துவதை அவதானித்த காளை மாடு பயத்தில் ஓடியது.
பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் கூரை மீது ஏறி நின்றுள்ளது. அதனையடுத்து கூரையில் நின்ற மாட்டை அயலவர்கள் இணைந்து கயிறு கட்டி கீழே இறக்கியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காளை மாடு கூரையில் ஏறி நிற்கும் காட்சி நெகிழ்ச்சிக் காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது.
தெருநாய்கள் துரத்தியதால் கூரையில் ஏறிய காளை மாடு; தெலங்கானாவில் நெகிழ்ச்சி வைரலாகும் காணொளி தெருநாய்கள் துரத்தியதால் காளை மாடு ஒன்று கூரையில் ஏறி நின்ற நெகிழ்ச்சிக் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. தெலங்கானாவில் உள்ள ஜெய்நாத் என்ற பகுதியில் காளை மாடு சென்று கொண்டிருந்தது. அதன்போது அவ்வழியே பல தெருநாய்கள் நின்றுள்ளன. காளை மாட்டைக் கண்டதும் தெருநாய்கள் குரைத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தது. தெருநாய்கள் துரத்துவதை அவதானித்த காளை மாடு பயத்தில் ஓடியது. பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் கூரை மீது ஏறி நின்றுள்ளது. அதனையடுத்து கூரையில் நின்ற மாட்டை அயலவர்கள் இணைந்து கயிறு கட்டி கீழே இறக்கியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காளை மாடு கூரையில் ஏறி நிற்கும் காட்சி நெகிழ்ச்சிக் காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது.