• Apr 03 2025

கண்டியில் பஸ் விபத்து - 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!!

Tamil nila / Mar 16th 2024, 10:56 pm
image

கண்டி பிரதான வீதியில் பேருந்து  விபத்துக்குள்ளானதில் 30  பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அதாவது பஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இந்த பேருந்தில் சாரதியுடன் சுமார் 30 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்  ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கண்டியில் பஸ் விபத்து - 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி. கண்டி பிரதான வீதியில் பேருந்து  விபத்துக்குள்ளானதில் 30  பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது பஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .இந்த பேருந்தில் சாரதியுடன் சுமார் 30 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Advertisement

Advertisement

Advertisement