• Jul 22 2025

ரயில் கடவையை கடப்பதில் கவனயீனம் - பேருந்து சாரதி கைது!

shanuja / Jul 21st 2025, 9:12 am
image

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து  சாரதி  ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


ஜூலை 17 ஆம் தேதி, கினிகத்தேனையில் உள்ள லக்சபானவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பேருந்து, பாதுகாப்பு கேட்டை மூடியிருந்த வாரகாவா ரயில் கடவையை நெருங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆபத்தை பொருட்படுத்தாமல், சாரதி பேருந்தை கேட்டின் எதிர்ப் பக்கத்தில் உள்ள ஒரு குறுகிய இடத்தின் வழியாக இயக்கினார்.


பேருந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கடவையைக் கடந்து சென்றது. 


இந்தப் பொறுப்பற்ற செயல் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரயில்வே கேட்டை காப்பாளரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார்  குறித்த சாரதியை கைது செய்தனர்.  


அதன்பின்னலர் சாரதியை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது சாரதிக்கு பிணை வழ ங்கப்பட்டதுடன் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் கடவையை கடப்பதில் கவனயீனம் - பேருந்து சாரதி கைது நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து  சாரதி  ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.ஜூலை 17 ஆம் தேதி, கினிகத்தேனையில் உள்ள லக்சபானவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பேருந்து, பாதுகாப்பு கேட்டை மூடியிருந்த வாரகாவா ரயில் கடவையை நெருங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆபத்தை பொருட்படுத்தாமல், சாரதி பேருந்தை கேட்டின் எதிர்ப் பக்கத்தில் உள்ள ஒரு குறுகிய இடத்தின் வழியாக இயக்கினார்.பேருந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கடவையைக் கடந்து சென்றது. இந்தப் பொறுப்பற்ற செயல் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரயில்வே கேட்டை காப்பாளரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார்  குறித்த சாரதியை கைது செய்தனர்.  அதன்பின்னலர் சாரதியை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது சாரதிக்கு பிணை வழ ங்கப்பட்டதுடன் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement