பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.
அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.