• Nov 06 2024

யாழில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த பேருந்து பழுது - பயணத்தை தொடர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்கள்..!samugammedia

Tamil nila / Dec 25th 2023, 7:16 pm
image

Advertisement

யாழில் இருந்து கட்டைக்காடு  (வடமராட்சிகிழக்கு)  நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  யாழ்ப்பாணம் கண்டிவீதியில் கைதடி சித்த வைத்தியசாலைக்கு முன் பழுதடைந்து மேற்கொண்டு  பயணிக்கமுடியாமல் நிக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் இன்றைய தினம் (25.12.23 ) மாலை  5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சிகிழக்கு பகுதிக்கு செல்வதற்காக பேருந்தில் 25க்கு மேற்பட்ட மக்கள்  உள்ளார்கள்.  கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த பழுதான பேருந்தைத்தான்  சேவையில் ஈடுபடுத்தி கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூக செயற்பாட்டாளரும்  யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  தலைவருமான இ.முரளீதரன் கருத்து  தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கட்டைக்காடு  சுமார் 70KM தூரத்தைக்கொண்டது.  இப்படிப்பட்ட பிரதேசத்துக்கு  நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல்  மிகவும் பழுதான  கியார்  பாவிக்க முடியாத நிலையில் உள்ள பேருந்தை விளங்கியமையால் தற்போது  வீதி ஒரத்தில் பழுதடைந்து நிக்கின்றது.  

யாழ்ப்பாணத்திலிருந்து பளைவரையான பிரதேசத்துக்கு பயணிக்க இருந்தவர்களை  வீதியால் பயணிக்கும் ஏனைய பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர்.

தற்போது பேருந்தில் இருப்பவர்கள் மாசார் தொடக்கம் கேவில்வரை பயணிப்பவர்கள் தான்  இருக்கின்றார்கள்.  கோண்டாவில் சாலைக்கு சாரதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றார். 

சம்மந்தப்பட்ட அதிகாரிகளே  இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுத்து வடமராட்சிகிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு  வசதிகளை செய்து தரவேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வடமராட்சி கிழக்கு  பிரதேச மக்களிடம் தேர்தல்களில் வாக்கு பெற்றவர்களும் நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்கிறார். 




யாழில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த பேருந்து பழுது - பயணத்தை தொடர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்கள்.samugammedia யாழில் இருந்து கட்டைக்காடு  (வடமராட்சிகிழக்கு)  நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  யாழ்ப்பாணம் கண்டிவீதியில் கைதடி சித்த வைத்தியசாலைக்கு முன் பழுதடைந்து மேற்கொண்டு  பயணிக்கமுடியாமல் நிக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்றைய தினம் (25.12.23 ) மாலை  5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வடமராட்சிகிழக்கு பகுதிக்கு செல்வதற்காக பேருந்தில் 25க்கு மேற்பட்ட மக்கள்  உள்ளார்கள்.  கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த பழுதான பேருந்தைத்தான்  சேவையில் ஈடுபடுத்தி கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.குறித்த சம்பவம் தொடர்பில் சமூக செயற்பாட்டாளரும்  யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  தலைவருமான இ.முரளீதரன் கருத்து  தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் கட்டைக்காடு  சுமார் 70KM தூரத்தைக்கொண்டது.  இப்படிப்பட்ட பிரதேசத்துக்கு  நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல்  மிகவும் பழுதான  கியார்  பாவிக்க முடியாத நிலையில் உள்ள பேருந்தை விளங்கியமையால் தற்போது  வீதி ஒரத்தில் பழுதடைந்து நிக்கின்றது.  யாழ்ப்பாணத்திலிருந்து பளைவரையான பிரதேசத்துக்கு பயணிக்க இருந்தவர்களை  வீதியால் பயணிக்கும் ஏனைய பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர்.தற்போது பேருந்தில் இருப்பவர்கள் மாசார் தொடக்கம் கேவில்வரை பயணிப்பவர்கள் தான்  இருக்கின்றார்கள்.  கோண்டாவில் சாலைக்கு சாரதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளே  இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுத்து வடமராட்சிகிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு  வசதிகளை செய்து தரவேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வடமராட்சி கிழக்கு  பிரதேச மக்களிடம் தேர்தல்களில் வாக்கு பெற்றவர்களும் நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement