• Sep 23 2024

வவுனியா நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள்!samugammedia

Tamil nila / Sep 19th 2023, 6:09 pm
image

Advertisement

வவுனியா நகரசபைக்குட்பட்ட இடங்களில் உள்ள நடைபாதைகளை சிறு வியாபார நிலையங்கள் ஆக்கிரமித்துள்ளமையினால் பாதசாரிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி என்பன இவ்வாறு நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் விபத்துக்களை சந்திக்கும் நிலைமைகள் எற்பட்டுள்ளது.

வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து தமது வியாபாரத்தினை மேற்கொள்வதனால் பாதசாரிகள் வீதியால் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சன நெருக்கடி நிறைந்த குறித்த பகுதியில் இவ்வாறான நிலைமை காணப்படுவதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் கடந்த காலங்களில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் அண்மைக்காலமாக நகரசபையும் இவ்விடயத்தில் தமது கண்காணிப்பை செலுத்தாமையினால் தினந்தோறும் இவ்வாறான நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகாரித்து செல்கின்றது.

எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் சிறவியாபாரிகளும் பாதிக்கப்படாத வகையில் நகரசபை சிறந்த தீர்வை ஏற்படுத்த வேண்டும் வரியிறுப்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள்samugammedia வவுனியா நகரசபைக்குட்பட்ட இடங்களில் உள்ள நடைபாதைகளை சிறு வியாபார நிலையங்கள் ஆக்கிரமித்துள்ளமையினால் பாதசாரிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி என்பன இவ்வாறு நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் விபத்துக்களை சந்திக்கும் நிலைமைகள் எற்பட்டுள்ளது.வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து தமது வியாபாரத்தினை மேற்கொள்வதனால் பாதசாரிகள் வீதியால் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சன நெருக்கடி நிறைந்த குறித்த பகுதியில் இவ்வாறான நிலைமை காணப்படுவதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.இது தொடர்பில் கடந்த காலங்களில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் அண்மைக்காலமாக நகரசபையும் இவ்விடயத்தில் தமது கண்காணிப்பை செலுத்தாமையினால் தினந்தோறும் இவ்வாறான நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகாரித்து செல்கின்றது.எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் சிறவியாபாரிகளும் பாதிக்கப்படாத வகையில் நகரசபை சிறந்த தீர்வை ஏற்படுத்த வேண்டும் வரியிறுப்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement