• Apr 20 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய வர்த்தகர்!

Chithra / Mar 1st 2025, 12:26 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் சிகரட்டுகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொண்டு வந்த, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய வர்த்தகர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் சிகரட்டுகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொண்டு வந்த, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement