• Nov 23 2024

மத்தியுடன் நல்லுறவை கொண்டிருப்பதன் ஊடாக : மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறமுடியும் - சிறீரங்கேஸ்வரன்

Tharmini / Nov 11th 2024, 2:20 pm
image

சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல.

தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சார் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.

அதனை நோக்கியே எமது அரசியல் நகர்வுகளும் இணக்க அரசியல் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (11)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் மேலும் கூறுகையில்,

இதுவரைகாலமும் சமஸ்டி என்ற சொல்லை வைத்து மக்களை குழப்பி சுயலாபமடைந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரன் குமார் பொன்னம்பலம் கூறியிருக்கின்றார் சமஸ்டி என்பது பிரிவினைவாமோ தனித்துவமோ அல்ல.

அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி செல்வதே என்று. இதையே நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று நீண்டகாலமதாக கூறிவருகின்றோம்.  குறிப்பாக சமஸ்டி என்பதால் அதிகாரங்கள் அதிகமாக கிடைக்கும் என்றோ ஒற்றையாட்சி என்றால் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்ற எண்ணமும் தேவையற்றது.

மேற்குலகின் சில நாடுகளில் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் நாடுகள் சில தனி நாணயம், தனி கொடி, தனி நாடாளுமன்றம் என்ற அனைத்தையும் கொண்டுள்ளது.

இது சமஸ்டியை விட அதிகமான அதிகாரங்களை கொண்டதாகும். இதை எமது அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் பெயர் பிரச்சினை இல்லை. அதன் உள்ளடக்கமே முக்கியமானதாகும் என்பதே எமது நிலைப்பாடு.

இதேநேரம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது நிலைப்பாடு. இதன்படியே மக்களுக்கான சேவையை நாம் முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம். 

இதேநேரம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கெடுப்பதா அல்லது பங்கெடுக்காதிருப்பதா என்ற எமது நிலைப்பாடு இருக்குமே தவிர யாழ்ப்பாணத்தில் வந்து புலம்பும் ஒரு சிலரை கூறுவதை போன்று நாம் எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவியை பெறவுள்ளதாக கூறியிருக்கவில்லை.

அவ்வாறான எண்ணமும் எமக்கு இல்லை. 

ஆனால் மத்தியுடன் நல்லுறவை கொண்டிருப்பதனூடாகவே மக்களுக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்தக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு. இதைாயே நாம் கடந்த காலங்களிலும் செய்திருக்கின்றோம்.

இதேநேரம் எமது நிலைப்பாட்டையே இன்று ஏனைய தரப்பினரும் ஏற்று வெளிப்படையாக பேசத்தொடங்கிவிட்டனர்.

இதேவேளை நாம் ஜனாதிபதி அனுரவை நாமாக சென்று சந்திக்கவில்லை. அவரே எம்மை அழைத்து சந்தித்திருந்தார். அவரது சந்திபின் கருதுகோள் எதிர்கால அரசமைப்பு தொடர்பாகவும் இருக்கலாம் அது அவரது எண்ணப்பாடு. 

ஆனால் நாம் தேர்தலின் பின்னரே ஆட்சியில் பங்கெடுப்பது தொடர்பில் சிந்திப்போம் என்று வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் எமது பக்கம் இம்முறை மக்களின் அலை திரும்பியுள்ளதால் தான் யாழ்ப்பாணம் வந்து சிலர் எம்மைப்பற்றி இவ்வாறு புலம்புகின்றனர்.

தெருவில் குரைக்கும் நாய்களுக்கெல்லாம் கல்லெறிபவர்கள் அல்ல நாம் . அது போன்றே இது தொடர்பிலும் நாம் அலட்டிக்கொள்ளவில்லை.

எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் அனைத்து மக்களும் உரிய நேரத்திற்கு சென்று வாக்குகளை அளித்த எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்திற்கு வாக்களித்து எமது கரங்களை அரசியல் ரீதியில் பலப்படுத்தி உங்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தியுடன் நல்லுறவை கொண்டிருப்பதன் ஊடாக : மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறமுடியும் - சிறீரங்கேஸ்வரன் சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சார் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.அதனை நோக்கியே எமது அரசியல் நகர்வுகளும் இணக்க அரசியல் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (11)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் மேலும் கூறுகையில்,இதுவரைகாலமும் சமஸ்டி என்ற சொல்லை வைத்து மக்களை குழப்பி சுயலாபமடைந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரன் குமார் பொன்னம்பலம் கூறியிருக்கின்றார் சமஸ்டி என்பது பிரிவினைவாமோ தனித்துவமோ அல்ல.அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி செல்வதே என்று. இதையே நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று நீண்டகாலமதாக கூறிவருகின்றோம்.  குறிப்பாக சமஸ்டி என்பதால் அதிகாரங்கள் அதிகமாக கிடைக்கும் என்றோ ஒற்றையாட்சி என்றால் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்ற எண்ணமும் தேவையற்றது.மேற்குலகின் சில நாடுகளில் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் நாடுகள் சில தனி நாணயம், தனி கொடி, தனி நாடாளுமன்றம் என்ற அனைத்தையும் கொண்டுள்ளது. இது சமஸ்டியை விட அதிகமான அதிகாரங்களை கொண்டதாகும். இதை எமது அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.அந்தவகையில் பெயர் பிரச்சினை இல்லை. அதன் உள்ளடக்கமே முக்கியமானதாகும் என்பதே எமது நிலைப்பாடு.இதேநேரம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது நிலைப்பாடு. இதன்படியே மக்களுக்கான சேவையை நாம் முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம்.  இதேநேரம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கெடுப்பதா அல்லது பங்கெடுக்காதிருப்பதா என்ற எமது நிலைப்பாடு இருக்குமே தவிர யாழ்ப்பாணத்தில் வந்து புலம்பும் ஒரு சிலரை கூறுவதை போன்று நாம் எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவியை பெறவுள்ளதாக கூறியிருக்கவில்லை. அவ்வாறான எண்ணமும் எமக்கு இல்லை. ஆனால் மத்தியுடன் நல்லுறவை கொண்டிருப்பதனூடாகவே மக்களுக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்தக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு. இதைாயே நாம் கடந்த காலங்களிலும் செய்திருக்கின்றோம். இதேநேரம் எமது நிலைப்பாட்டையே இன்று ஏனைய தரப்பினரும் ஏற்று வெளிப்படையாக பேசத்தொடங்கிவிட்டனர்.இதேவேளை நாம் ஜனாதிபதி அனுரவை நாமாக சென்று சந்திக்கவில்லை. அவரே எம்மை அழைத்து சந்தித்திருந்தார். அவரது சந்திபின் கருதுகோள் எதிர்கால அரசமைப்பு தொடர்பாகவும் இருக்கலாம் அது அவரது எண்ணப்பாடு. ஆனால் நாம் தேர்தலின் பின்னரே ஆட்சியில் பங்கெடுப்பது தொடர்பில் சிந்திப்போம் என்று வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் எமது பக்கம் இம்முறை மக்களின் அலை திரும்பியுள்ளதால் தான் யாழ்ப்பாணம் வந்து சிலர் எம்மைப்பற்றி இவ்வாறு புலம்புகின்றனர்.தெருவில் குரைக்கும் நாய்களுக்கெல்லாம் கல்லெறிபவர்கள் அல்ல நாம் . அது போன்றே இது தொடர்பிலும் நாம் அலட்டிக்கொள்ளவில்லை.எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் அனைத்து மக்களும் உரிய நேரத்திற்கு சென்று வாக்குகளை அளித்த எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்திற்கு வாக்களித்து எமது கரங்களை அரசியல் ரீதியில் பலப்படுத்தி உங்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement