• Nov 28 2024

ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கெப் ரக வாகனம்; இருவர் பரிதாப மரணம்

Chithra / Nov 6th 2024, 8:11 am
image

 

கொஸ்கம - அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். 

குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், சாரதி உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கெப் ரக வாகனம்; இருவர் பரிதாப மரணம்  கொஸ்கம - அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், சாரதி உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement