சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ 120 ரூபா, 125 ரூபா, 132 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதைந்துரைக்கப்பட்டுள்ளது.
அவற்றின் அடிப்படையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாவாகப் பேணுவதற்கும் சம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோவிற்கு 125 ரூபாவிலிருந்து 130 ரூபாவாகவும் கீரி சம்பா கொள்வனவை ஒரு கிலோவிற்கு 132 ரூபாவிலிருந்து 140 ரூபாவாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் விலை அதிகரிப்பிற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பா - 130 , கீரி சம்பா - 140 கொள்வனவு விலை அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ 120 ரூபா, 125 ரூபா, 132 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதைந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாவாகப் பேணுவதற்கும் சம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோவிற்கு 125 ரூபாவிலிருந்து 130 ரூபாவாகவும் கீரி சம்பா கொள்வனவை ஒரு கிலோவிற்கு 132 ரூபாவிலிருந்து 140 ரூபாவாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தினார். இந்த நிலையில் விலை அதிகரிப்பிற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.