• Feb 12 2025

வடக்கு,கிழக்கில் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Chithra / Feb 12th 2025, 7:30 am
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மற்றும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  

வீதியைப் புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பதற்காக விரிவான அணுகுமுறை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுவதுடன், 

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,500 கிலோமீற்றர்கள் வடமாகாணத்திலும் மற்றும் 500 கிலோமீற்றர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு,கிழக்கில் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மற்றும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  வீதியைப் புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பதற்காக விரிவான அணுகுமுறை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுவதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,500 கிலோமீற்றர்கள் வடமாகாணத்திலும் மற்றும் 500 கிலோமீற்றர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement