• May 18 2024

நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல்! samugammedia

Chithra / Jul 15th 2023, 3:04 pm
image

Advertisement

நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜுவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

எனினும் குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன், அதன் பரீசிலனை பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நீர்க் கட்டணத் திருத்தத்தைத் தயாரிக்கும் போது தேசிய நீர் வழங்கல் சபையின் செயற்பாட்டுச் செலவை மாத்திரம் ஈடுசெய்தல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கடனைச் செலுத்துதல் ஆகிய இரண்டு முறைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திருத்தத்தில், சமுர்த்தி பயனாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கட்டணம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், கழிவு நீர் துறைகளில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறைந்தளவில் நீரை பாவனைச் செய்யும் நுகர்வோருக்கு ஒரு அலகின் கட்டணத்தில் 20 சதவீதத்தை மானியமாக வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கட்டண திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய நீர் வழங்கல் சபைக்கு மாதாந்தம் 7 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மின்கட்டண திருத்தத்துடன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமையே நீர் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் நீர் கட்டண கொள்கை மற்றும் நீர் கட்டண சூத்திரம் தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் சபையினால் நிலுவையில் உள்ள 8 பில்லியன் ரூபா வட்டித்தொகையை உள்ளுர்; வங்கிகளுக்கு செலுத்துவதற்கு நீர்வழங்கல் அமைச்சு திறைசேரியிடம் பணத்தை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 வருடங்களில் மானியக் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், வருடாந்தம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நீர் கட்டணம் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் samugammedia நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜுவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனினும் குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன், அதன் பரீசிலனை பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.நீர்க் கட்டணத் திருத்தத்தைத் தயாரிக்கும் போது தேசிய நீர் வழங்கல் சபையின் செயற்பாட்டுச் செலவை மாத்திரம் ஈடுசெய்தல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கடனைச் செலுத்துதல் ஆகிய இரண்டு முறைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த திருத்தத்தில், சமுர்த்தி பயனாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கட்டணம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.அத்துடன், கழிவு நீர் துறைகளில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.குறைந்தளவில் நீரை பாவனைச் செய்யும் நுகர்வோருக்கு ஒரு அலகின் கட்டணத்தில் 20 சதவீதத்தை மானியமாக வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.இந்தநிலையில், கட்டண திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய நீர் வழங்கல் சபைக்கு மாதாந்தம் 7 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், மின்கட்டண திருத்தத்துடன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமையே நீர் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் நீர் கட்டண கொள்கை மற்றும் நீர் கட்டண சூத்திரம் தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.நீர்வழங்கல் சபையினால் நிலுவையில் உள்ள 8 பில்லியன் ரூபா வட்டித்தொகையை உள்ளுர்; வங்கிகளுக்கு செலுத்துவதற்கு நீர்வழங்கல் அமைச்சு திறைசேரியிடம் பணத்தை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 10 வருடங்களில் மானியக் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், வருடாந்தம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நீர் கட்டணம் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement