• Apr 18 2026

நிலக்கரி விலைமனு கோரலுக்கான அழைப்பு!

shanu / Apr 6th 2026, 4:16 pm
image

2026/2027 காலப்பகுதிக்காக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான விலைமனு கோரலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


2026 செப்டம்பர் முதல் 2027 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் 2.28 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்காக இந்த விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


லக்விஜய மின்நிலையத்தின் 2026/2027 காலப்பகுதிக்கான விநியோகஸ்தரைத் தெரிவு செய்வதற்கான இந்த விலைமனு கோரல், லங்கா நிலக்கரி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த விலைமனு கோரல்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 


அதன்படி, 38 கப்பல்கள் மூலம் இந்த நிலக்கரி விநியோகம் செய்யப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டில் 20 கப்பல்களும், 2027 ஆம் ஆண்டில் 18 கப்பல்களுமாக இந்த விநியோகம் அமைய வேண்டும் என்பதுடன், 210 நாட்களுக்குள் அனைத்து விநியோக நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என அந்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வழங்கப்படும் நிலக்கரியின் தரம் மற்றும் விலைமனு கோரல்களை முன்வைக்கும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் லங்கா நிலக்கரி நிறுவனம் இந்த விலைமனு கோரல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

நிலக்கரி விலைமனு கோரலுக்கான அழைப்பு 2026/2027 காலப்பகுதிக்காக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான விலைமனு கோரலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் முதல் 2027 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் 2.28 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்காக இந்த விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. லக்விஜய மின்நிலையத்தின் 2026/2027 காலப்பகுதிக்கான விநியோகஸ்தரைத் தெரிவு செய்வதற்கான இந்த விலைமனு கோரல், லங்கா நிலக்கரி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைமனு கோரல்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 38 கப்பல்கள் மூலம் இந்த நிலக்கரி விநியோகம் செய்யப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டில் 20 கப்பல்களும், 2027 ஆம் ஆண்டில் 18 கப்பல்களுமாக இந்த விநியோகம் அமைய வேண்டும் என்பதுடன், 210 நாட்களுக்குள் அனைத்து விநியோக நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என அந்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் நிலக்கரியின் தரம் மற்றும் விலைமனு கோரல்களை முன்வைக்கும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் லங்கா நிலக்கரி நிறுவனம் இந்த விலைமனு கோரல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement