தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரசார செயலாளர் அஞ்சன சந்திரசிறி மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபனைக் கொண்டாடும் வகையில் செல்வராஜா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்திருந்ததாகவும், இந்நிலையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டாடுவதன் மூலம் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேரடியாக ஆதரவளித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்படிச் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் 157 (ஏ) பிரிவை கடுமையாக மீறுவதாகும்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பிவித்துரு ஹெல உறுமய சார்பில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தாக்கல் செய்த முறைப்பாடு நேற்றையதினம்(21) கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த முறைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஜேந்திரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து samugammedia தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரசார செயலாளர் அஞ்சன சந்திரசிறி மேலும் தெரிவிக்கையில்,தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபனைக் கொண்டாடும் வகையில் செல்வராஜா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்திருந்ததாகவும், இந்நிலையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டாடுவதன் மூலம் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேரடியாக ஆதரவளித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அப்படிச் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் 157 (ஏ) பிரிவை கடுமையாக மீறுவதாகும்.மேற்படி சம்பவம் தொடர்பில் பிவித்துரு ஹெல உறுமய சார்பில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தாக்கல் செய்த முறைப்பாடு நேற்றையதினம்(21) கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த முறைப்பாடு குறித்து தகவல்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.