• Oct 18 2024

மட்டக்களப்பில் புற்று நோய் விழிப்புணர்வு நடை பேரணி!

Tamil nila / Oct 18th 2024, 7:33 pm
image

Advertisement

புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் புற்றுநோய் விழிப்புணர்வு நடை பேரணி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குறித்த விழிப்புணர்வு நடை பேரணியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரி முன்பாக ஆரம்பமாகி கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக  வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக  விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுதர சேவைகள் பாணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  விழிப்புணர்வு பேரணி நடை பயணத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை,  ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள்,  உத்தியோகத்தர்கள்,  வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதன்போது புற்றுநோய் தொடர்பில் துண்டுபிரசுரம் மக்களுக்கு வங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வூடடல் கருத்தரங்கு நிகழ்வும் நடைபெற்றது.

உலகலாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் பெண்களிடையே புற்றுநோயானது கண்டறியப்படும் மிகவும் பொதுவான நோயாக மார்ப புற்றுநோய் காணப்படுகின்றது.  இலங்கையின் தேசிய புற்றுநோய்  பதிவேட்டின் படி 2021ஆம் ஆண்டில் பெண்கள் மத்தியில் கண்டறியப்பட்ட அனைத்து வகைப் புற்றுநோய்களிலும்  27% மானவை மார்பகப் புற்றுநோயாகக் காணப்படுகின்றது. இவ் வீதாசாரமானது எண்ணிக்கையில் 5485 பெண்கள் மேலும் ஆண்களில் 124 புதிய மார்பகப் புற்றுநோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பல ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயின் தாக்கமானது அதிகரித்து வருகின்றதனைக் காணமுடிகின்றது.



மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிக்கவும். உடனடி சிகிச்சையைப் பரிந்துரைக்கவும் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச சுகாதாரப் பிரச்சாரமாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதனால் இதற்கான விழிப்புணர்விற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.



மட்டக்களப்பில் புற்று நோய் விழிப்புணர்வு நடை பேரணி புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் புற்றுநோய் விழிப்புணர்வு நடை பேரணி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.குறித்த விழிப்புணர்வு நடை பேரணியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரி முன்பாக ஆரம்பமாகி கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக  வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக  விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.மட்டக்களப்பு பிராந்திய சுதர சேவைகள் பாணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  விழிப்புணர்வு பேரணி நடை பயணத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை,  ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள்,  உத்தியோகத்தர்கள்,  வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது புற்றுநோய் தொடர்பில் துண்டுபிரசுரம் மக்களுக்கு வங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வூடடல் கருத்தரங்கு நிகழ்வும் நடைபெற்றது.உலகலாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் பெண்களிடையே புற்றுநோயானது கண்டறியப்படும் மிகவும் பொதுவான நோயாக மார்ப புற்றுநோய் காணப்படுகின்றது.  இலங்கையின் தேசிய புற்றுநோய்  பதிவேட்டின் படி 2021ஆம் ஆண்டில் பெண்கள் மத்தியில் கண்டறியப்பட்ட அனைத்து வகைப் புற்றுநோய்களிலும்  27% மானவை மார்பகப் புற்றுநோயாகக் காணப்படுகின்றது. இவ் வீதாசாரமானது எண்ணிக்கையில் 5485 பெண்கள் மேலும் ஆண்களில் 124 புதிய மார்பகப் புற்றுநோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பல ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயின் தாக்கமானது அதிகரித்து வருகின்றதனைக் காணமுடிகின்றது.மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிக்கவும். உடனடி சிகிச்சையைப் பரிந்துரைக்கவும் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச சுகாதாரப் பிரச்சாரமாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதனால் இதற்கான விழிப்புணர்விற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement