சுவிற்ஸர்லாந்து - வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் நேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்தின்போது படுகாயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸில் இடம்பெற்ற கார் விபத்து - யாழ். இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழப்பு சுவிற்ஸர்லாந்து - வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் நேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தின்போது படுகாயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.