• Nov 22 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணிலின் கருத்தை விமர்சிக்கும் கர்தினால்

Tharun / Jun 11th 2024, 6:55 pm
image

சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இலங்கை கத்தோலிக்க திருச்சபையை தொடர்புபடுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரையும் உள்ளடக்கிய குழுவின் கலந்துரையாடல்களையும் இலகுபடுத்துவதற்காக சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக அதிபர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இதனை மறுத்துரைத்த கர்தினால் ரஞ்சித், ரணில் விக்ரமசிங்கவின் இந்த விளக்கம் தவறாக வழிநடத்தும் செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு சட்டமா அதிபர் ஓய்வு பெறும்போது இன்னொருவரை நியமிக்கலாம் அத்தோடு சட்டமா அதிபர் யார் என்பது தொடர்பில் எமக்கு கவலையில்லை.

எனினும், நடப்பு சட்டமா அதிபர் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டு அவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை கேள்விக்குரியது.

அதேவேளை, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அல்லது ஆட்சிக்கு வருவார்கள் என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனினும் 274 உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் சொத்துக்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணங்களையும் அறிய மக்களுக்கு உரிமையுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணிலின் கருத்தை விமர்சிக்கும் கர்தினால் சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இலங்கை கத்தோலிக்க திருச்சபையை தொடர்புபடுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரையும் உள்ளடக்கிய குழுவின் கலந்துரையாடல்களையும் இலகுபடுத்துவதற்காக சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக அதிபர் தெரிவித்திருந்தார்.இருப்பினும், இதனை மறுத்துரைத்த கர்தினால் ரஞ்சித், ரணில் விக்ரமசிங்கவின் இந்த விளக்கம் தவறாக வழிநடத்தும் செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு சட்டமா அதிபர் ஓய்வு பெறும்போது இன்னொருவரை நியமிக்கலாம் அத்தோடு சட்டமா அதிபர் யார் என்பது தொடர்பில் எமக்கு கவலையில்லை.எனினும், நடப்பு சட்டமா அதிபர் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டு அவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை கேள்விக்குரியது.அதேவேளை, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அல்லது ஆட்சிக்கு வருவார்கள் என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனினும் 274 உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் சொத்துக்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டது.இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணங்களையும் அறிய மக்களுக்கு உரிமையுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement