• Oct 09 2024

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Chithra / Oct 2nd 2024, 1:58 pm
image

Advertisement

 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொழும்பு, ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வழக்கை 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

2016 பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி நபரொருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு  கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொழும்பு, ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த வழக்கை 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.2016 பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி நபரொருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement